கல்வி கருத்தரங்கு
எமது பாடசாலையின் கல்விவளர்ச்சிக்கான கருத்தரங்கு, 9.04.2011 Tosenhagen skole இல் ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், நிவாகத்தினர்
ஆகியோருடன் பேராசிரியர் திரு.ரகுபதி அவர்கள் இணைந்து கலந்துரையாடலாக ஆரம்பிக்கப்பட்டது. அதில் அவர் குறிப்பிட்ட விடயம் எமது நாட்டில் ஆங்கில கல்வி கற்றல் முறை போல இங்கேயும் தமிழை கற்றல் வேண்டும் என்ற அடிப்படை எண்ணக்கருவுடன் கருத்துக்களை பரிமாறினார். அதன்படி கல்விக்குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது அதில் இரண்டு ஆசிரியர்களும், இரண்டு பெற்றோர்களும், நிர்வாகத்தில் இருந்து ஒருவருமாக 5 உறப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். நான்கு மணி நேரங்கள் இந்த கருத்தரங்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
